இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கடந்த சனிக்கிழமை அன்று சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து ரெய்னாவும் தனது ஓய்வு முடிவை அறிவித்திருந்தார்.
அதனையடுத்து கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் தோனிக்கு ஃபேர்வெல் மேட்ச் வேண்டும் என சொல்லி வந்தனர்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டரான இர்பான் பதான் ‘அண்மையில் ஒய்வு பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் அனைவருக்கும் ஃபேர்வெல் மேட்ச் வேண்டும்’ என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
“இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் கோலோச்சிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலர் அவர்களது ஓய்வு முடிவை அறிவித்த பிறகு அவர்களை முறையாக வழி அனுப்பி வைப்பதற்கான ஃபேர்வெல் மேட்ச் குறித்து பலரும் பேசுகிறார்கள். அதற்கு தீர்வாக தற்போதைய இந்திய அணி வீரர்கள் ஒரு அணியாகவும். அவர்களுக்கு எதிராக ஓய்வு பெற்ற வீரர்கள் ஒரு அணியாகவும் கிரிக்கெட் போட்டி ஒன்றை விளையாடலாம். அந்த மேட்சை நிதி திரட்டும் முயற்சியாகவும் நடத்தலாம். இதன் மூலம் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ஃபேர்வெல் மேட்சையும் நடத்தலாம். அதை ஏன் செய்யக் கூடாது?” எனவும் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ஐடியா சூப்பராக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இது பார்ப்பதற்கு சுவாரஸ்யமான ஒன்ற
பதான் பரிந்துரைத்துள்ள ஓய்வு பெற்ற வீரர்கள் அணியில் கம்பீர், ஷேவாக், டிராவிட், லக்ஷ்மன், யுவராஜ், ரெய்னா, தோனி, பதான், அஜித் அகார்கர், ஜாகீர் கான், ஓஜா ஆகியோர் அடங்கியுள்ளனர்.