தோனிக்கு கவுரவம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்..!

தோனிக்கு கவுரவம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்..!
தோனிக்கு கவுரவம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்..!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய கிரிக்கெட் அணியில் 15 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தார். இதனை அவரது ரசிகர்கள் #15YearsOfDhonism என்ற ஹேஷ்டேக் மூலம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். தற்போதுள்ள இந்திய அணியில் தோனி இல்லை. உலகக் கோப்பை முடிந்தபோது, சென்ற அவர் இன்னும் அணிக்கு திரும்பவில்லை. இதில் பல உள் அரசியல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தோனி அணியில் இல்லாவிட்டாலும், அவரது ரசிகர்கள் இன்னும் அவரை கொண்டாடத் தவறவில்லை.

இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு உட்பட்ட அதிகாரப்பூர்வ இணையதளமான கிரிக்டெ்.காம்.ஆஸ்திரேயா (www.cricket.com.au, கடந்த 10 ஆண்டுகளில் உலகளவில் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய வீரர்களை வைத்து ஒரு கனவு அணியை உருவாக்கியுள்ளது. அந்த அணிக்கு இந்தியாவின் எம்.எஸ்.தோனியை கேப்டனாக நியமித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த வீரரான ஸ்டீவ் ஸ்மித்தை கூட கண்டுக்கொள்ளாமல், தோனிக்கு கேப்டன் பதவியை கொடுத்து கவுரவித்துள்ளது.

தோனி மட்டுமல்லாமல் இந்த கனவு அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவை தேர்வு செய்துள்ளது. பின்பு மூன்றாம் நிலை வீரராக இப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த கனவு அணியில் இந்திய பவுலர்கள் யாரும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஆண்டுகளில் சிறந்த கனவு அணி வீரர்கள் விவரம்

1. ரோஹித் சர்மா (இந்தியா)

2. ஹசிம் ஆம்லா (தென் ஆப்பிரிக்கா)

3. விராட் கோலி (இந்தியா)

4. ஏபி டி வில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)

5. ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)

6. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

7. தோனி (இந்தியா / கேப்டன்)

8. ரஷீத் கான் (ஆப்கானிஸ்தான்)

9. மிட்சல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா)

10. ட்ரண்ட் போல்ட் (நியூசிலாந்து)

11. லசித் மலிங்கா (இலங்கை)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com