திடீரென பேருந்தை ஓட்டிய தோனி : அதிர்ச்சியில் திகைத்த வீரர்கள்..!

திடீரென பேருந்தை ஓட்டிய தோனி : அதிர்ச்சியில் திகைத்த வீரர்கள்..!
திடீரென பேருந்தை ஓட்டிய தோனி : அதிர்ச்சியில் திகைத்த வீரர்கள்..!
Published on

இந்திய கிரிக்கெட் அண்இயின் முன்னாள் கேப்டன் தோனி திடீரென அணி வீரர்கள் இருந்த பேருந்தை ஓட்டிச்சென்றதும் அனைவரும் திகைத்துப்போனதாக விவிஎஸ் லக்‌ஷ்மன் தனது பழைய நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த 15ஆம் தேதி தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வை அறிவித்தார். அன்று முதல் இன்று வரை சமூக வலைத்தளங்களில் அவர் தான் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். அவர் தொடர்பான நினைவுகள் மற்றும் கருத்துகளை கிரிக்கெட் வீரர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மன் தோனியுடனான தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார். அவர்கூறும்போது, “2006ஆம் ஆண்டு தோனியுடன் பாகிஸ்தானுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடிக்கொண்டிருந்தோம். அந்தப் போட்டியில் தோனி தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். பேட்டிங் முடித்த பின்னர் உடைமாற்றும் அறைக்கு வந்த தோனி, தான் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக கூறினார். தான் சதம் அடித்துவிட்டதாகவும், இதற்குமேல் டெஸ்ட் போட்டியில் தான் என்ன செய்ய வேண்டும் எனவும் நகைச்சுவையாக தெரிவித்தார். ஆனால் அதன்பின்னரே தோனி எப்போதும் அணியில் இருந்தார்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய லக்‌ஷ்மன், “2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டிக்கு 2 போட்டிகள் முன்பு தான் கும்ப்ளே ஓய்வை அறிவித்தார். அதனால் தோனி கேப்டனாக பொறுப்பேற்றார். நாக்பூரில் போட்டி முடிந்த பின்னர் நாங்கள் அனைவரும் பேருந்தில் அமர்ந்திருந்தோம். அப்போது டிரைவரிடம் சென்ற தோனி, அவரை பின்னால் சென்று அமருமாறு கூறினார். பின்னர் மைதானத்தில் இருந்து சட்டென பேருந்தை ஓட்டத்தொடங்கினார். நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் திகைத்துப்போனோம். இந்திய அணியின் கேப்டன் பேருந்து ஓட்டுகிறாரா ? என நினைத்தோம். ஹோட்டல் வரை அவரே பேருந்தை ஓட்டினார்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com