'களத்தில் கூலாக இருக்கிறார் ஹர்திக் பாண்டியா' - விளையாடாவிட்டாலும் புகழும் அஸ்வின்!

'களத்தில் கூலாக இருக்கிறார் ஹர்திக் பாண்டியா' - விளையாடாவிட்டாலும் புகழும் அஸ்வின்!
'களத்தில் கூலாக இருக்கிறார் ஹர்திக் பாண்டியா' - விளையாடாவிட்டாலும் புகழும் அஸ்வின்!
Published on

ஒரு கேப்டனாக ஹர்திக் பாண்டியா குறுகிய காலத்தில் வெற்றி பெற்றுவிட்டார் எனப் புகழ்ந்துள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

2024 டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் முயற்சியில் பிசிசிஐ தீவிரமாக ஈடுபட தொடங்கியுள்ளது. இதனொரு பகுதியாக இந்திய அணியின் ஒயிட் பால் கேப்டனாக எதிர்காலத்தில் ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா குறுகிய காலத்தில் வெற்றி பெற்றுவிட்டார் எனப் பாராட்டியுள்ளார் ரவிச்சந்திரன் அஷ்வின்.

இதுகுறித்து அஸ்வின் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''ஹர்திக் பாண்டியா தனது தனித்திறமையை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு கேப்டனாக குறுகிய காலத்தில் அவர் வெற்றி பெற்று விட்டார் என்றே சொல்லலாம். ஹர்திக்கிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அவர் களத்தில் மிகவும் கூலாக இருக்கிறார். அணியை நிதானமாக வைத்திருக்கிறார். அவர் மிகவும் புத்திசாலி கிரிக்கெட் வீரர். அணி வீரர்கள் ஒரு குழுவாக சிறப்பாக செயல்படுவது மிக அவசியம். அது அவரது வழிநடத்துதலில் சிறப்பாகவே இருக்கிறது'' என்றார்.

ஹர்திக் பாண்டியாவை கபில்தேவுடன் ஒப்பிடுவது பற்றி அஷ்வின் கூறுகையில், ''கபில்தேவ் ஒரு சிறந்த இந்திய கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல, உலகம் கண்ட மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர். கிரிக்கெட் உலகைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருவர் சிறந்து விளங்குவார். கடந்த காலத்தில் யார் சிறந்து விளங்கினாலும் சரி, நிகழ்காலத்தில் நீங்கள் உலகில் சிறந்தவராக இருக்க வேண்டும்" என்றார்.

ஹர்திக் பாண்டியாவின் தலைமையின் கீழ் இதுவரை அஸ்வின் விளையாடியதில்லை. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பைக்குப் பின் அஸ்வின் டி20 போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தவறவிடாதீர்: அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 கால்பந்து வீரர்கள்! உச்சத்தில் ரொனால்டோ - இத்தனை கோடிகளா?!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com