ஐசிசி தலைவரான ஜெய் ஷா| போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது எப்படி? பாகிஸ்தானுக்கு பாதிப்பா?

ஜெய் ஷா போட்டியே இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது எப்படி என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெய் ஷா, ஐசிசி
ஜெய் ஷா, ஐசிசிஎக்ஸ் தளம்
Published on

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் (ஐசிசி) தலைவராக இருக்கும் கிரெக் பார்க்லேவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து, புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை ஐசிசி நிர்வாகம் தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் பதவிக்காலம் கொண்ட ஐசிசி தலைவர் பதவியில் ஒருவர் மூன்றுமுறை பதவி வகிக்கலாம். கிரெக் பார்க்லே, தொடர்ந்து இரண்டு முறை ஐசிசி தலைவராக உள்ள நிலையில், மூன்றாவது முறை போட்டியிடப்போவதில்லை எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, இந்தப் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய் ஷா மட்டுமே விண்ணப்பித்திருந்தார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கும்பட்சத்தில் வரும் டிசம்பர் 1ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய் ஷா போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து அவர், ஐசிசி வரலாற்றில் மிக இளம் வயதுள்ள தலைவர் என்ற பெருமையையும், இந்தப் பதவியை அலங்கரிக்கும் ஐந்தாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இந்த நிலையில், ஜெய் ஷா போட்டியே இல்லாமல் தேர்வு செய்யப்பட்டது எப்படி என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையும் படிக்க: புகார் எதிரொலி| பெனிசிலின் ஆன்டிபயாடிக் மருந்தை திரும்பப் பெற்ற அபோட் இந்தியா நிறுவனம்..என்ன காரணம்?

ஜெய் ஷா, ஐசிசி
ஐசிசி சேர்மனாகும் ஜெய் ஷா? அடுத்த பிசிசிஐ செயலாளர் யார்?

ஐசிசியின் முழு நேர உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், அசோசியேட் நாடுகளின் பிரதிநிதிகள் அடங்கிய இயக்குநர் குழு உறுப்பினர்கள் 17 பேர்தான் ஐசிசிக்கு தலைவராக தகுதியுள்ளவர்களை பரிந்துரைக்க வேண்டும். அப்படி பரிந்துரைக்கப்படும் நபர்களுக்கு தேர்தல் நடத்தப்படும். தேர்தலில் வெற்றிபெறுவர் தலைவராக்கப்படுவார்.

இதற்கிடையே, 17 நபர்கள் கொண்ட இயக்குநர் குழுவில் தற்போது ஒரு உறுப்பினர் பதவி காலியாக உள்ளது. இதையடுத்து மீதமுள்ள 16 உறுப்பினர்களே, ஜெய் ஷாவை ஒருமனதாக தேர்வு செய்துள்ளனர். இதனாலேயே அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், ஜெய் ஷா தேர்வு செய்யப்பட்டதற்குப் பின்னணியில் பிசிசிஐயின் பொருளாதாரமே மேலோங்கி இருந்ததாகக் காரணம் கூறப்படுகிறது.

ஜெய் ஷா
ஜெய் ஷாx

ஆம், ஐசிசியின் பெருமளவு வருமானத்தில் இந்திய வாரியமான பிசிசிஐயின் பங்களிப்பே அதிகம் எனக் கூறப்படுகிறது. இதற்கடுத்தே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் போர்டுகள் உள்ளன. கிட்டத்தட்ட பிசிசிஐயின் வருமானத்தை அதிகம் நம்பியிருக்கும் ஐசிசியும், இந்தியா வைக்கும் பல கோரிக்கைகளுக்கு தலையாட்டுவதாகக் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் ஒரே காரணம், பிசிசிஐ அளிக்கும் தொகைதான். அதன் காரணமாகவே, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள்கூட இந்தியாவின் கோரிக்கைக்கு உடனே செவிசாய்த்துவிடுகின்றன.

ஜெய் ஷா
ஜெய் ஷாட்விட்டர்

இந்த நாடுகள் ஜெய் ஷாவுக்கு முன்கூட்டியே ஆதரவு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உலக கிரிக்கெட்டில் பிசிசிஐ செலுத்தும் ஆதிக்கமும், வணிகமும்தான் ஜெய் ஷாவை ஐசிசி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதன்மூலம் உலக கிரிக்கெட்டின் அசைக்க முடியாத சக்தியாக ஜெய் ஷா இருப்பார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கும் அதேவேளையில், அது அண்டை நாடான பாகிஸ்தானுக்கு ஆபத்தாக இருக்கும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிக்க: 2025க்குள் 6 லட்சம் பேருக்கு வேலை.. அதில் 70% பெண்களுக்கு வாய்ப்பு.. அதிரடியில் ஆப்பிள்!

ஜெய் ஷா, ஐசிசி
ஐசிசி தலைவராகும் ஜெய் ஷா? ஆதரவு தெரிவிக்கும் நாடுகள்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com