"பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் பேசிய வார்த்தையை வெளியே சொல்ல முடியாது"- ஷர்துல் தாக்குர்

"பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் பேசிய வார்த்தையை வெளியே சொல்ல முடியாது"- ஷர்துல் தாக்குர்
"பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் பேசிய வார்த்தையை வெளியே சொல்ல முடியாது"- ஷர்துல் தாக்குர்
Published on

பும்ராவை இங்கிலாந்து வீரர்கள் திட்டிய வார்த்தை பொதுவெளியில் சொல்லக் கூடியது அல்ல என்று இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ்க்கு பேசியுள்ள ஷர்துல் தாக்குர் "லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் ஆண்டர்சனை கடுமையான பந்துவீச்சு மூலம் தாக்க நினைத்தோம். லார்ட்ஸ் டெஸ்ட்டில் நடந்த நிகழ்வுகள் ஓவல் வரை தொடர்ந்தது. பின்பு நான் ஆண்டர்சனிடம் 'உங்கள் வீரர்கள் பும்ராவை அவதூறான ஆபாசமான வார்த்தைகள் மூலம் பேசினர்’ எனக் கூறினேன். அந்த வார்த்தைகள் பொதுவெளியில் சொல்லக் கூடியது அல்ல. அந்த நிகழ்வுக்கு பின்புதான் ஒட்டுமொத்த இந்திய அணியினரும் வெகுண்டு எழுந்தனர்" என்றார்.

மேலும் பேசிய அவர் "டெயில் எண்டர்களான நாங்கள் வெளிநாட்டு ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும்போது பவுன்சர்களை சந்திப்போம். ஏன், ஆஸ்திரேலியாவில் கூட நடராஜனுக்கு வேகப்பந்துவீச்சாளர்களான மிட்சல் ஸ்டார்க், பாட் கம்மின்ஸ் ஆகியோர் கடுமையான பவுன்சர்களை வீசினர். பவுலர்களுக்கு இந்த பேட்ஸ்மேன்கள் உள்ளூர் போட்டிகளில் கூட ரன்கள் அடிக்கவில்லை என்பது தெரிந்திருக்கும். அதுபோலதான் இப்போது நாங்கள் செய்கிறோம்" என்றார் ஷர்துல் தாக்குர்.

இன்னும் சற்றே கோபமாக "வெளிநாட்டு வீரர்கள் செய்தால் சரி. அதையே நாங்கள் செய்தால் தவறா? நாங்கள் ஏன் பவுன்சர்கள் வீசக்கூடாது? பாடி லைன் பந்துவீச்சை ஏன் செய்யக் கூடாது? நாங்கள் யாரையும் திருப்திபடுத்த விளையாடவில்லை. நாங்கள் வெற்றிப்பெறவே விளையாடுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்" என்றார் ஷர்துல் தாக்குர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com