நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என மூன்று அணிகளும் 14 புள்ளிகள் பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகி உள்ளது.
புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தை பிடிப்பதில் தான் இப்போதைக்கு ஆட்டம் கலை கட்டியுள்ளது. நான்காவது இடத்திற்கு ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பிடிக்க மும்முரம் காட்டி வருகின்றன.
இதில் இப்போதைக்கு கொல்கத்தாவின் கை உயர்ந்துள்ளது.
11 ஆட்டங்களில் விளையாடிய கொல்கத்தா ஆறு வெற்றியும், ஐந்து தோல்வியும் பெற்றுள்ளது.
அடுத்ததாக விளையாடவுள்ள மூன்று ஆட்டங்களில் கொல்கத்தா இரண்டில் வென்றாக வேண்டும். அதுவும் பெரிய ரன் ரேட் வித்தியாசத்தில் இருந்தால் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகிவிடும்.
இதில் ஏதேனும் கொல்கத்தாவிற்கு அசம்பாவிதமாக நடந்தால் பாதகம் தான்.