பாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: அடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்

பாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: அடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
பாகிஸ்தானில் விளையாட மாட்டோம்: அடம்பிடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள்
Published on

பாகிஸ்தானில் பாதுகாப்பான சூழல் இல்லை என்று மூத்த வீரர்கள் கூறியதால் இருநாடுகளுக்கு இடையிலான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்தியுள்ளது.  

கடந்த 2009-ம் ஆண்டு பாகிஸ்தான் சென்ற இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதனையடுத்து பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்ல மற்ற நாட்டு அணிகள் தயக்கம் காட்டி வந்தன. பாகிஸ்தான் உடனான போட்டிகள் வெளிநாட்டு மைதானங்களிலேயே நடைபெற்று வந்தது. இருப்பினும், மீண்டும் பாகிஸ்தானில் சர்வதேச கிரிக்கெட்டை கொண்டுவர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பல்வேறு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வந்தது. இந்திய அணிக்கும் அழைப்புகள் விடுத்தது. ஆனால், மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துவிட்டது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தொடர் முயற்சி காரணமாக, பாகிஸ்தான், உலக லெவன் அணிகள் மோதிய 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. ஆனால் உலக லெவன் அணியில் இந்தியாவைச் சேர்ந்த வீரர்கள் யாரும் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானில் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. ஆனால் வெஸ்ட் இஸ்டீஸ் அணியைச் சேர்ந்த மூத்த வீரர்கள் கிறிஸ் கெயில், பொல்லார்டு மற்றும் டவ்னே பிராவோ பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளதாக தெரிகிறது. இதனால், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஒத்திவைத்துள்ளது. 

இதனையடுத்து, இரு அணிகளும் ஒத்துழைப்பு அளிக்கும் பட்சத்தில் டி20 தொடரானது அடுத்த ஆண்டு நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்  தெரிவித்துள்ளது. உலக லெவன் அணி பாகிஸ்தானில் விளையாடிய பிறகு மற்ற வீரர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக விளையாட மறுப்பது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com