"பிரச்னை ஏற்பட்டால் முகத்தை கூட பார்த்துக்கொள்ள மாட்டோம்"- விராட் கோலி குறித்து பிரசாத்

"பிரச்னை ஏற்பட்டால் முகத்தை கூட பார்த்துக்கொள்ள மாட்டோம்"- விராட் கோலி குறித்து பிரசாத்
"பிரச்னை ஏற்பட்டால் முகத்தை கூட பார்த்துக்கொள்ள மாட்டோம்"- விராட் கோலி குறித்து பிரசாத்
Published on

விராட் கோலி, ரவி சாஸ்திரி ஆகியோருடன் பலமுறை வாக்குவாதம் செய்திருக்கிறேன், அப்போதெல்லாம் முகத்தை கூட பார்த்துக்கொள்ள விரும்பமாட்டோம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வாளர் எம்எஸ்கே. பிரசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரசிகர் ஒருவர் எம்எஸ்கே பிரசாதிடம் நீங்கள் விராட் கோலி, ரவி சாஸ்திரியுடன் வாக்குவாதம் செய்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர் "இதை நீங்கள் அவர்களிடம் கேட்டால் நன்றாக இருக்கும். நாங்கள் ஒன்றாகக் கூட்டத்தில் பங்கேற்கும்போது, கடும் வாக்குவாதம் நடைபெறும். மீட்டிங் முடிந்த பிறகு அவர்கள் முகத்தைக்கூட என்னால் பார்க்க முடியாது. அவர்களும் அதே மனநிலையில்தான் இருப்பார்கள். இருப்பினும், மறுநாள் எப்போதும் போல சகஜமாகப் பேசிக்கொள்வோம். நான் மேலாண்மை துறை மாணவன். என்னால், ஒரு விஷயத்தை சரியாகக் கையாள முடியும்" என்றார்.

மேலும் பேசிய அவர் "யாரையும் குறைசொல்லும் பழக்கம் என்னிடம் கிடையாது. வேண்டுமென்றால், எங்களின் வாக்குவாதம் தொடர்பாக விராட், சாஸ்திரியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். நான் பலமுறை இருவரையும் சமாதானப்படுத்தும் அளவுக்குப் பிரச்னைகள் நடந்திருக்கிறது" என்றார் எம்எஸ்கே பிரசாத்.

இந்தியாவின் முன்னாள் வீரர் எம்எஸ்கே பிரசாத் 2016 ஆம் ஆண்டு இந்திய அணித் தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்தபோது இவர்தான் தலைவராக இருந்தார். அப்போது, அம்பத்தி ராயுடுவுக்குப் பதிலாக விஜய் சங்கரை அணிக்குத் தேர்வு செய்ததால் இவருக்கு கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com