‘சேவாக்கை அவுட்டாக்க விரித்த வலை; ஆனால் நடந்தது வேறு’-நினைவுகளை பகிர்ந்த பிரெட் லீ

‘சேவாக்கை அவுட்டாக்க விரித்த வலை; ஆனால் நடந்தது வேறு’-நினைவுகளை பகிர்ந்த பிரெட் லீ
‘சேவாக்கை அவுட்டாக்க விரித்த வலை; ஆனால் நடந்தது வேறு’-நினைவுகளை பகிர்ந்த பிரெட் லீ
Published on

ஒரு நாள் போட்டியில் இந்திய வீரர் சேவாக்கை அவுட் செய்ய ஷார்ட் பிட்ச் பந்து போட்டு வலை விரித்தோம். ஆனால் அவர் அதை பவுண்டரி லைன் தாண்டி சிக்சருக்கு பறக்க விட்டதாக ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ தனது நினைவலைகளை பகிர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், 2003-ல் நடந்த இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்த ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கை அவுட் செய்ய ஆஸ்திரேலியா அணி ஒரு வலை விரித்ததாகவும், அதற்கு சேவாக் பதிலடி கொடுத்ததாகவும் ஒரு ருசிகர தகவலை பகிர்ந்துள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரெட் லீ.

அதில் அவர், ஷார்ட் பிட்ச் பந்து போட்டு சேவாக்கை அவுட் செய்ய தேர்டு மேன் (Thired Man) நிலையில் ஒரு வீரரை கேட்ச் பிடிக்குமாறு களத்தில் நிறுத்தி நான் ஷார்ட் பிட்ச் பந்தை வீசினேன். அப்போது அவுட் ஆகிடுவார் என நாங்கள் தேர்டு மேனில் இருந்த வீரரையே பார்த்துக் கொண்டிருந்தோம். ஆனால் பந்து அந்த வீரரை தாண்டி சிக்சருக்கு பறந்தது.

அப்போது நான் அவரை பார்த்தபோது அவர் சிறு கண் சிமிட்டலை மட்டும் சிமிட்டினார் என்று பிரெட் லீ கூறியுள்ளார். மேலும் பல நேரங்களில் அவர் சச்சின் டெண்டுல்கரை பிரதிபலிப்பார் என்றும் அவருடைய யூடியூப் சேனலில் சேவாக்கை பற்றி பல சுவாரசியமான நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com