’எங்க வெற்றி இதோட நிற்காது...’ விராத் ஆக்ரோஷ பேட்டி!

’எங்க வெற்றி இதோட நிற்காது...’ விராத் ஆக்ரோஷ பேட்டி!
’எங்க வெற்றி இதோட நிற்காது...’ விராத் ஆக்ரோஷ பேட்டி!
Published on

’எங்களின் வெற்றியை மெல்போர்ன் டெஸ்ட் போட்டியுடன் நிறுத்த மாட்டோம்’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி கூறினார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இப்போது விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு போட்டியில் வென்று சமநிலையில் இருந்தன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வந்தது. 

இந்திய அணி முதல் இன்னிங்ஸில், 7 விக்கெட் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி, தனது முதல் இன்னிங் சில் 151 ரன் எடுத்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி, 8 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. 

இதன் மூலம், முதல் இன்னிங்சின் 292 ரன்கள் முன்னிலையுடன் சேர்த்து இந்திய அணி, 399 ரன்களை ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக் காக நிர்ணயித்தது. இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 261 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து தோல்வியை தழுவி யது. இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம், இந்த தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.

வெற்றிக்குப் பின் பேசிய விராத் கோலி, ’’எங்கள் வெற்றியை இதோடு நிறுத்த மாட்டோம். இந்த வெற்றியின் மூலம் அடுத்து சிட்னியில் நடக்க இருக்கும் போட்டிக்கு அதிக நம்பிக்கை கிடைத்திருக்கிறது. பேட்டிங், ஃபீல்டிங், பந்துவீச்சு என மூன்று துறைகளிலும் நாங்கள் சிறப்பாக செயல் பட்டோம். அதனால்தான் நாங்கள் பார்டர்-கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைத்துள்ளோம். இதை தொடர வேண்டும். இதே போலதான் தென்னா ப்பிரிக்காவிலும் விளையாடினோம். எங்களை பற்றி வந்த எந்த கமென்ட்களையும் கருத்துகளையும் நான் படிக்கவில்லை. அதை தொடரவும் இல்லை. அதிக ரன் குவிக்க வேண்டும் என்பதிலேயே கவனம் செலுத்தினோம். நான்கு மற்றும் ஐந்தாவது நாளில் இந்த பிட்ச்சில் ஆடுவது கடி னம் என்று எங்களுக்குத் தெரியும். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு விக்கெட் வீழ்த்தினார்கள். குறிப்பாக பும்ரா நன்றாக விளை யாடினார். இதற்கு இந்தியாவில் நடக்கும் முதல் தர போட்டிகள்தான் காரணம். மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரோகித் ஆகியோரும் நன் றாக விளையாடினார்கள்’’ என்றார்.

அவரிடம், அடுத்த போட்டியையும் வென்று, ஆஸ்திரேலியாவில் தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெயரை பெறுவீர்களா? என்று கேட்டபோது, ’’நேர்மையாக, அது பற்றி பதில் சொல்ல இயலாது. கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எங்கள் வேகத்தை யாரும் தடுத்துவிடவும் முடியாது’’ என்றார்.

நான்காவது டெஸ்ட் போட்டி, ஜனவரி 3 ஆம் தேதி சிட்னியில் நடக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com