ஓய்வுக்குப் பின்னர் தோனி களம் இறங்குவது எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக அமைந்துள்ளதாக வீரேந்தர் சேவாக் கூறியுள்ளார்.
2020-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் வரும் 19-ஆம் தேதி தொடங்க இருக்கின்றன. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோத இருக்கின்றன. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், ஓய்வுக்கு பின்னர் தோனி களம் இறங்குவது எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
பவர் ப்ளே வித் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் பேசிய அவர் “ இந்த ஐபிஎல் தொடர் அனைவருக்கும் எக்ஸ்ட்ரா ஸ்பெஷலாக இருக்கும் என நினைக்கிறேன். அது வீரர்களுக்கும் சரி, பார்வையாளர்களுக்கும் சரி. மீண்டும் தோனியை களத்தில் காண்பது நிச்சயம் மகிழ்ச்சிகரமான ஒன்றாகத்தான் இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் பேசிய அவர் “ இந்த ஊரடங்கு காலத்தில் நான் விளையாடிய கிரிக்கெட் போட்டிகள் உட்பட பல போட்டிகளை பார்த்து, என்னை நான் ஆய்வுக்கு உட்படுத்தினேன். இந்தியர்களின் டிஎன்ஏவின் ஒரு பகுதியாக கிரிக்கெட் இருக்கிறது. அந்த வகையில் மீண்டும் களத்தில் இறங்கி பேட்டை பிடிப்பதன் மூலம் எங்களது சுவாசம் இயங்க ஆரம்பிக்கும்” என்று பேசினார்.