‘என்னை மன்னித்து விடுங்கள்’: கண்ணீருடன் ஸ்மித் பேட்டி - வீடியோ

‘என்னை மன்னித்து விடுங்கள்’: கண்ணீருடன் ஸ்மித் பேட்டி - வீடியோ

‘என்னை மன்னித்து விடுங்கள்’: கண்ணீருடன் ஸ்மித் பேட்டி - வீடியோ
Published on

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தன்னை மன்னித்துவிடுமாறு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கண்ணீர் மல்க கூறியுள்ளார். 

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “என்னுடைய தலைமையில் முதல்முறையாக பந்தை சேதப்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது. எங்கள் மீது கோபமும், வேதனையும் அடைந்துள்ள அனைத்து ரசிகர்கள், சக வீரர்கள், முன்னாள் வீரர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடுங்கள், நான் மிகவும் கடுமையாக மனவேதனை அடைந்துள்ளது. அதனை நடக்கவிட்டிருக்க கூடாது. யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. அதற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன். 

நான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டேன். அதனுடைய பின்விளைவுகள் எனக்கு தெரிகிறது. இது எனது தலைமையில் தோல்விதான். நான் கிரிக்கெட்டை அளவுக்கு அதிகமாக விரும்புகிறேன். ஆஸ்திரேலியாவிற்கு நான் அளித்த வலிக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் செய்த தவறுகளை சரி செய்யவும், என் மீதான மரியாதையை மீட்டெடுக்கவும் தேவையான அனைத்தையும் செய்வேன்” என்றார். 

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய வீரர்கள் பந்தை சேதப்படுத்திய புகாரில் கேப்டன் ஸ்மித், துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com