"நம்பர் 1 பவுலர் ஷாஹீன் அப்ரிடிக்கு இப்படியொரு நிலையா!?" - வாசிம் அக்ரம் அதிர்ச்சி

"நம்பர் 1 பவுலர் ஷாஹீன் அப்ரிடிக்கு இப்படியொரு நிலையா!?" - வாசிம் அக்ரம் அதிர்ச்சி
"நம்பர் 1 பவுலர் ஷாஹீன் அப்ரிடிக்கு இப்படியொரு நிலையா!?" - வாசிம் அக்ரம் அதிர்ச்சி
Published on

பாகிஸ்தான் அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி இங்கிலாந்தில் தனது காயத்தின் சிகிச்சைக்கு அவரே சொந்தமாக பணம் செலுத்துவதாக ஷாகித் அப்ரிடி கூறியது, அதிர்ச்சி அளிப்பதாக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலக பந்துவீச்சாளர்களில் சிறந்த வீரராக விளங்குபவர் ஷாஹின் அப்ரிடி. ஷாஹீன் அப்ரிடி மற்றும் பும்ரா இருவரும் ஆசியகோப்பையில் பங்கேற்காதது தான் பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. அந்த அளவிற்கு அணிக்கு முக்கியமான வீரராக ஷாஹின் அப்ரிடி இருந்து வருகிறார். மேலும் முழங்காலில் ஏற்பட்ட காரணமாக தான் அவர் ஆசியகோப்பையில் பங்கேற்க முடியாமல் போனது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் நம்பர் 1 வேகப்பந்து வீச்சாளர் ஷாஹின் அப்ரிடி தனது காயத்தின் சிகிச்சைக்கு அவரது சொந்த பணத்தை தான் பயன்படுத்தி வருகிறார் என்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்தவித உதவியும் செய்யவில்லை என்றும் முன்னாள் பாகிஸ்தான் ஆல்ரவுண்டர் ஷாஹித் அப்ரிடி தெரிவித்திருந்தார்.

ஷாஹித் அப்ரிடி கூறிகையில், ” ஷாஹீன் சிகிச்சைக்காக சொந்த செலவில் தான் இங்கிலாந்து சென்றார், ஹோட்டலில் தங்குவதற்கு தனது சொந்த பணத்தை செலவழித்தார். நான் அவருக்கு ஒரு மருத்துவரை ஏற்பாடு செய்தேன், பின்னர் அவர் மருத்துவரை தொடர்பு கொண்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எதுவும் செய்யவில்லை. ஒருங்கிணைப்பதில் இருந்து டாக்டர்கள் வரை, அவரது ஹோட்டல் அறை மற்றும் உணவு செலவுகள் வரை அனைத்தையும் அவர் தனது சொந்த பாக்கெட்டில் இருந்து செலுத்துகிறார்" என்று கூறியிருந்தார்.

இது குறித்து பேசியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம், இந்த செய்தி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அவர் பேசுகையில், "இது அதிர்ச்சியளிக்கிறது. ஷாஹீன் அப்ரிடி எங்களின் டாப் கிரிக்கெட்டர்களில் ஒருவர். அவர் ஒரு பாக்ஸ் ஆபிஸ் வீரர், பாகிஸ்தான் அவரைப் பார்க்கப் போவதில்லை என்றால் பின்னர் யார் பார்ப்பார். இது உண்மையாக இருந்தால், அவர் உடனடியாக உலகின் தலைசிறந்த முழங்கால் அறுவை சிகிச்சை நிபுணரிடம் அனுப்பப்பட வேண்டும். நான் இன்னும் அதிர்ச்சியாக தான் இருக்கிறேன்" என்று தெரிவித்தார்.

வரும் 2022 டி20 உலககோப்பைக்கு அவர் முழு உடல் தகுதியுடன் திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்ப்பார்த்து இருக்கும் நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்படி செய்திருப்பது வருத்தம் அளிப்பதாக ஷாகித் அப்ரிடி தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com