“ஒரு கணிப்பு நிறைவேறிவிட்டது; அடுத்தது கங்குலி முதல்வர்தான்” - சேவாக் ஆருடம்

“ஒரு கணிப்பு நிறைவேறிவிட்டது; அடுத்தது கங்குலி முதல்வர்தான்” - சேவாக் ஆருடம்
“ஒரு கணிப்பு நிறைவேறிவிட்டது; அடுத்தது கங்குலி முதல்வர்தான்” - சேவாக் ஆருடம்
Published on

கங்குலி குறித்த தனது இரண்டு கணிப்புகளில் ஒன்று நிறைவேறிவிட்டதாகவும் அடுத்த ஒன்று மட்டும் இன்னும் பக்கி இருப்பதாகவும் வீரேந்திர சேவாக் குறிப்பிட்டுள்ளார்.  

பிசிசிஐயின் தலைவராக கங்குலி பொறுப்பேற்றதில் இருந்து ‘தாதா’வை பற்றி பலரும் பழைய நினைவுகளை பகிர்ந்தபடியே உள்ளனர். கடந்த காலங்கலில் நடந்த சுவாரஸ்யமான செய்திகளை அவர்கள் இப்போது நினைவுபடுத்தி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், கங்குலி பிசிசிஐ தலைவராக பதவியேற்றது தொடர்பாக இப்போது ஒரு பழைய நினைவை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இது தொடர்பாக சேவாக் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ தளத்தில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், “இனிமேல் பிசிசிஐயின் நடவடிக்கை மிகவும் ஆக்ரோஷமாக இருக்கும். ஏனென்றால் தற்போது கங்குலி அதன் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். கங்குலி 2000ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக இருந்த போது அவர் அப்படிதான் செயல்பட்டார். அத்துடன் எங்களுக்கு வெளிநாட்டு தொடர்களில் எவ்வாறு வெற்றிப் பெறுவது என்பது தொடர்பாக கற்றுக் கொடுத்தார். அதேபோல தற்போதும் அவர் செயல்படுவார் என்று நான் நினைக்கிறேன்.

சவுரவ் கங்குலி பிசிசிஐயின் தலைவராக அறிவிக்கப்பட்ட பிறகு எனக்கு அவர் 2007ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் விளையாடியது ஞாபகத்திற்கு வந்தது. அந்த ஆட்டத்தின் போது நான் , கங்குலி குறித்து இரண்டு விஷயங்களை கணித்து கூறினேன். அந்தக் கணிப்பில் இப்போது ஒன்று நிஜமாகிவிட்டது. இன்னொன்று விரைவில் நிஜமாகும். நான் முதலில் கணித்தது கங்குலி பிசிசிஐயின் தலைவராக வருவார் என்பது. இரண்டாவது அவர் மேற்கு வங்கத்தின் முதல்வராக வருவார் என்பது. அந்தக் கணிப்பு விரைவில் நிறைவேறும்” என்று சேவாக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com