டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் இரண்டாவது நுழைவாயிலுக்கு இந்திய வீரேந்திர சேவாக்கின் பெயர் சூட்டி கவுரவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சேவாக் பெயர் வைக்கப்பட்ட பலகையில் ஒரு பிழை ஏற்பட்டுவிட்டது.
இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த வீரேந்திர சேவாக், டெஸ்ட் போட்டியில் இரண்டு முறை முச்சதமும், ஒருநாள் போட்டியில் இரட்டை சதமும் அடித்துள்ளார். டெல்லியைச் சேர்ந்த சேவாக்கை கவுரவிக்கும் விதமாக டெல்லி கிரிக்கெட் சங்கம், டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலன் 2-வது நுழைவாயிலுக்கு அவரது பெயரை சூட்ட முடிவு செய்தது. அதன்படி இன்று 2-வத நுழைவாயிலுக்கு ‘வீரேந்திர சேவாக்’ என்று இன்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த விழாவில் சேவாக், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, நெஹ்ரா, தினேஷ் கார்த்திக் உள்ள இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். நுழைவாயிலின் ஒரு பாதியில் சேவாக்கின் படமும், மறுபாதியில் அவர் அடித்த ரன்கள் மற்றும் சில சாதனைகள் எழுதப்பட்டிருந்தது.
பலகையில் உள்ள சேவாக் குறித்த தவல்களின் விவரம்:
இந்த தகவலில், டெஸ்ட் போட்டியில் முதல் முச்சதம் அடித்த ஒரே இந்தியர் என்பது தவறானது ஆகும். இந்திய அணியில் சேவாக்கிற்கு அடுத்தப்படியாக கருண் நாயர் கடந்த ஆண்டு டிசம்பர் சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 303 ரன்கள் எடுத்தார். கருண் நாயரின் இந்த முச்சதத்தை சேவாக் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தனது பாணியில் வரவேற்று இருந்தார். இதனால் வேறு பலகை மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.