இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலி வித்தியாசமான முகக்கவசம் அணிந்து பயிற்சி மேற்கொள்ளும் காட்சி வெளியாகியுள்ளது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நாளை நடைபெறும் சூப்பர் 4 பிரிவு போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதுகின்றன. இதற்காக துபாயில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விராட் கோலி சிறப்பு வகை முகக்கவசம் அணிந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்தது.
இது குறைவான காற்றழுத்தத்தை உணரும் வகையில் உருவாக்கப்பட்ட சிறப்பு முகக்கவசமாகும். கடுமையான உடல் இயக்கம் தேவைப்படும் நேரத்தில் அதை பெறுவதற்கு மருத்துவ ரீதியாக தயாராகும் வகையில் இந்த சிறப்பு முகக்கவசத்தை கோலி அணிந்து ஓட்டப்பயிற்சியில் ஈடுபட்டார். இவ்வாறு பயிற்சியில் ஈடுபடுவது முகக் கவசம் இல்லாத தருணங்களில் உடல் இயக்கங்களை மிக விரைவாக மேற்கொள்ள இயலும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக ஆசியக் கோப்பையில் சீரான ஆட்டத்தை வெளிப்படுத்த துவங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 35 ரன்கள் குவித்த அவர், ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டமிழக்காமல் 59 ரன்களை குவித்து அசத்தி இருந்தார். சூப்பர் 4 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மற்றொரு பரபரப்பான போட்டி காத்திருக்கும் நிலையில், கோலி தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.