விராத் கோலி அபாரம், 243 ரன் குவித்தார்!

விராத் கோலி அபாரம், 243 ரன் குவித்தார்!

விராத் கோலி அபாரம், 243 ரன் குவித்தார்!
Published on

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி மீண்டும் 243 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து 536 ரன்களுக்கு டிக்ளேர் செய்யப்பட்டது.

இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11-ஆவது சதத்தை நேற்று அடித்‌தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் சதமடித்தார். டெஸ்ட் போட்டிகளில் கோலியின் இருபதாவது சதமாக இது அமைந்தது. முரளி விஜய் 155 ரன்களிலும் அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரஹானே ஒரு ரன்னிலும் வெளியேறினர். கோலி 156 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்திருந்தது.

 இரண்டாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறப்பாக ஆடிய விராத் கோலி இரட்டை சதம் அடித்தார். இது அவரது 6-வது இரட்டை சதம். ரோகித் ஷர்மா 65 ரன்களிலும் அவரைத் தொடர்ந்து வந்த அஸ்வின் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஆனால், இலங்கையும் பந்துவீச்சை சிதறடித்த விராத் கோலி, 243 ரன்களை குவித்து ஆட்டமிழந்தார். சண்டகன் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் அவர் அவுட் ஆனார். இதையடுத்து விக்கெட் கீப்பர் சஹாவும் ஜடேஜாவும் ஆடினர். பின்னர் 536 ரன்கள் குவித்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. 
 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com