ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கிரிக்கெட்டின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் விராட் கோலி விலக வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்திருக்கிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார், ஆனால் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களுக்கான கேப்டனாக தொடர்ந்து விராட் கோலியே செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், விராட் கோலி அனைத்து நிலை கிரிக்கெட் கேப்டன் பொறுப்புகளில் இருந்தும் விலகி, பேட்டிங்கில் முழுமையான கவனம் செலுத்த வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தெரிவித்திருக்கிறார்.
மேலும், “ரோகித் ஷர்மாவுக்கு இந்திய அணியை வழிநடத்துவதற்கான திறமை இருக்கிறது, அவர் எந்த நெருக்கடியான சூழலிலும் பொறுமையாக இருக்கக் கூடியவர். நான் அவரோடு டெக்கான் சார்ஜர்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியுள்ளேன், நல்ல ஆட்டக்காரர். தேவையான நேரத்தில் கோபத்தையும், பொறுமையை வெளிப்படுத்தக்கூடியவர். அவர் இந்திய அணியில் நல்ல மாற்றத்தை உருவாக்குவார். கோலியும் நல்ல பேட்ஸ்மேன் தான், அவர் இனி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தலாம்” என தெரிவித்தார்.