இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் விவிஎஸ் லஷ்மண் அறிவித்துள்ள கனவு டெஸ்ட் அணியில் இரண்டு இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விவிஎஸ் லஷ்மண்-க்கு மிக முக்கியமான இடம் உள்ளது. மொத்தம் 134 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 8781 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 45.97 ஆகும். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக லஷ்மண் அடித்த 281 ரன்கள் எடுத்தது அவரது சிறப்பான ஆட்டம் என்று கருதப்படுகிறது.
இந்நிலையில், தனது டெஸ்ட் கனவு அணியை விவிஎஸ் லஷ்மண் வெளியிட்டுள்ளார். அதில் இரண்டு இந்திய வீரர்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளனர். ஆனால் 4 ஆஸ்திரேலிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் விராட் கோலியும், பந்துவீச்சாளர்களில் அஸ்வினும் லஷ்மண் அணியில் இடம்பிடித்துள்ளனர். லஷ்மண் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்டீவன் ஸ்மித், வார்னர், ஸ்டார்க், ஹாசில்வுட் ஆகிய 4 வீரர்கள் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், தென் ஆப்பிரிக்கா அணியில் இருந்து டிவில்லியர்ஸ், ஹசிம் ஆம்லா, இங்கிலாந்து அணியில் இருந்து ஜோ ரூட், வில்லியம்சன் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ஆல் ரவுண்டராக வங்கதேச அணியின் ஷகிப் அல் ஹாசன் லஷ்மண் அணியில் உள்ளார்.