மெஸ்சியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!

மெஸ்சியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!
மெஸ்சியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி விளைமதிப்பு மிக்க வீரர்களின் பட்டியலில் 7 வது இடத்தை பிடித்துள்ளார். 

போர்பஸ் பத்திரிகை, விலை மதிப்பு மிக்க விளையாட்டு வீரர்களில் உலகின் ‘டாப் 10’ விளையாட்டு வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது. இதில் விராட் கோலி 7வது இடத்தை பிடித்துள்ளார். இதே பட்டியலில் உலக புகழ் பெற்ற கால்பந்து வீரர் லியோனல் மெஸ்சி 9வது இடத்தில் உள்ளார். இதில் விராட் கோலயின் மதிப்பு 93 கோடி ஆகும். மெஸ்சியின் மதிப்பு 83 கோடியாக உள்ளது அனைவரயும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடைய மிகச் சிறந்த ஆட்டத்தை ஒவ்வொரு போட்டியிலும் வெளிப்படுத்தி வருகிறார். சச்சின் உட்பட பல முன்னணி கிரிக்கெட் வீரர்களும் கோலியின் திறமையை பல இடங்களில் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் போர்பஸ் பத்திரகை அறித்துள்ள இந்த புதிய பட்டியல் கோலிக்கு மேலும் புகழை தேடி தந்துள்ளது. சமீபத்தில் நியூசிலாந்திற்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டியில் கோலி தனது 31 வது சதத்தை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com