"இவர் என்ன மாதிரி விளையாடுறார்" சச்சின் குறிப்பிட்ட வீரர் யார் ?

"இவர் என்ன மாதிரி விளையாடுறார்" சச்சின் குறிப்பிட்ட வீரர் யார் ?
"இவர் என்ன மாதிரி விளையாடுறார்" சச்சின் குறிப்பிட்ட வீரர் யார் ?
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மார்னஸ் லபுஷானேவின் ஆட்டம் தன்னுடைய ஆட்டத்தை நினைவுப்படுத்துவதாக இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு உதவும் வகையில் நலநிதி கிரிக்கெட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. இதில் ரிக்கிபாண்டிங் லெவன் அணிக்கு பயிற்சியாளராக செயல்படுகிறார் சச்சின் டெண்டுல்கா்.

இப்போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த சச்சின், பல்வேறு விஷயங்களை பகிர்ந்தார். அப்போது நிருபர்கள் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் யார் சிறந்த பேட்ஸ்மேன் என்ற கேள்வியை எழுப்பினர். அதற்கு பதிலளித்த சச்சின் "விராட் கோலி என்னுடைய நண்பர். எனவே கோலிதான் சிறந்த பேட்ஸ்மேன். பொதுவாக எனக்கு ஒருவரை மற்றொருவோடு ஒப்பிடுவது பிடிக்காது. நான் விளையாடிய காலக்கட்டத்தில் என்னை பலருடன் ஒப்பிட்டு பேசினர். ஆனால் நானோ என்னை நானாக இருக்க விடுங்கள் என ஒதுங்கிவிட்டேன்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் "யாரையும் ஒப்பிடாதீர்கள். இருவரின் பேட்டிங் திறமையையும் கண்டு ரசியுங்கள். அவர்களின் பேட்டிங்கால் நம்மை மகிழ்விக்கிறார்கள். நான் கோலியை தேர்வு செய்ததிற்கான காரணம், அவர் ஓர் இந்தியர்" என்றார். இதற்கடுத்து நீங்கள் அபாரமான ஆடிய காலத்தில் உங்கள் ஆட்டத்தை தற்போது நினைவுபடுத்தும் வீரா் யார் என்ற கேள்விக்கு ஆச்சரியமான பதிலை தந்தார் சச்சின்.

"ஆஸ்திரேலிய இளம் வீரர் மார்னஸ் லபுஷானே தான் எனது ஆட்டத்தை நினைவுபடுத்துகிறார். லார்ட்ஸில் நடைபெற்ற ஆஸி - இங்கிலாந்து இடையிலான இரண்டாவது டெஸ்ட்டில் ஸ்மித் காயமடைந்து வெளியேறினார். அப்போது ஆட வந்த லபுஷானே, இங்கிலாந்து வீரா் ஜோப்ரா ஆா்ச்சரின் பவுன்ஸர் பந்து அவர் ஹெல்மெட்டை பதம் பார்த்தது. அதன் பின்பு அவர் விளையாடிய விதம் என்னுடைய ஆட்ட நுணுக்கங்களை நினைவுப்படுத்தியது" என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com