"நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி, ஆனால்"-நாசர் ஹூசைன்!

"நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி, ஆனால்"-நாசர் ஹூசைன்!
"நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் கோலி, ஆனால்"-நாசர் ஹூசைன்!
Published on

விராட் கோலி இப்போது தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால் அதுதான் இங்கிலாந்துக்கு ஆபத்து என முன்னாள் கிரிக்கெட் வீரர் நாசர் ஹூசைன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்ட்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9-ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நாளை இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹூசைன் "ஆஸ்திரேலியாவில் ரஹானே தலைமையில் இந்தியா வென்றது வரலாறு. தன்னுடைய அமைதியான சுபாவத்தின் மூலம் ரஹானே இதை சாதித்து காட்டியுள்ளார்.இந்த வெற்றி கோலி மீது அழுத்தத்தை அதிகரித்து இருக்கிறது" என்றார்.

மேலும் "ஒருவேளை சென்னையில் நடைபெற இருக்கும் போட்டியில் இந்தியா சிறப்பாக விளையாடவில்லை என்றால் ஒட்டுமொத்த அழுத்தமும் கோலி மீது அதிகரிக்கும். ஆனால் இந்தியா வெற்றிப்பெற்றுவிட்டால் அது இங்கிலாந்துக்கு ஆபத்தாகிவிடும். அதனால்தான் இங்கிலாந்து முதல் டெஸ்ட்டிலேயே சிறப்பான தொடக்கத்தை கொடுக்க வேண்டும். இல்லையேல் கோலி மீண்டும் கிங்காகிவிடுவார். அது இங்கிலாந்துக்கு அடுத்தடுத்து ஆட்டத்தில் பிரச்னை ஏற்படும்" என்றார் நாசர் ஹூசைன்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com