'தோனியுடன் இருந்ததுதான்....' விராட் கோலியின் எமோஷனல் பதிவு - உருகிய ரசிகர்கள்

'தோனியுடன் இருந்ததுதான்....' விராட் கோலியின் எமோஷனல் பதிவு - உருகிய ரசிகர்கள்
'தோனியுடன் இருந்ததுதான்....' விராட் கோலியின் எமோஷனல் பதிவு - உருகிய ரசிகர்கள்
Published on

தோனியுடன் அமைத்த பார்ட்னர்ஷிப்தான் என் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது என்று இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி இன்ஸ்டாவில் எமோஷனலாக பதிவிட்டிருக்கிறார்.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நாளை ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. முதல் போட்டியில், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதுகிறது. அதேபோல, ஆசியக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை விராட் கோலி தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை விளையாட வேண்டும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விராட் கோலி கிரிக்கெட்டின் எந்த ஃபார்மெட்டிலும் அவர் சதம் விளாசவில்லை. இதனால் விராட் கோலி மீது பல்வேறு விமர்சனங்கள் தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்தது. பிசிசிஐ சார்பில் அவருக்கு போதிய ஓய்வும் அளிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இப்போது புத்துணர்ச்சியுடன் அணிக்கு திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போது இந்திய அணியனருடன் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் விராட் கோலி. எப்படியும் இம்முறை பழைய கோலியை பார்க்கலாம் என நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Virat Kohli (@virat.kohli)

இந்நிலையில் கிரிக்கெட்டில் தடம் பதித்து 14 ஆண்டுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தோனி குறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். அதில் "தோனியின் நம்பிக்கைக்குரிய பார்ட்னராக இருப்பது எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் உற்சாகமான மற்றும் மகிழ்ச்சியான காலகட்டம் . எங்களுடைய பார்ட்னர்ஷிப் எப்போதும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். 7+18" என தங்களின் ஜெர்சி நம்பரை கடைசியில் குறிப்பிட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com