கோலி கிட்டத்தட்ட ஒரு 'லெஜண்ட்' ! மனம் திறந்து பாராட்டிய தோனி

கோலி கிட்டத்தட்ட ஒரு 'லெஜண்ட்' ! மனம் திறந்து பாராட்டிய தோனி
கோலி கிட்டத்தட்ட ஒரு 'லெஜண்ட்' ! மனம் திறந்து பாராட்டிய தோனி
Published on

இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்திய கிரிக்கெட் அணிக்கு தலைமையேற்று டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போட்டிகளில் வெற்றி வாகை சூடியவர். அப்படிப்பட்ட சாதனைகளுக்கு சொந்தக்காரரான தோனி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் பதிவியில் இருந்து விலகினார். இதன் பின்பு இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வருகிறார்.

விராட் கோலியும் இந்திய அணிக்கு பல்வேறு போட்டிகளில் வெற்றிகளை வசப்படுத்தி வருகிறார். இப்போது இங்கிலாந்தில் இந்திய அணி சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் தனி ஒருவனாக ஆடி விராட் கோலி விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தார். இந்தப் போட்டியின் இறுதியில் இந்தியா தோல்வியடைந்தாலும், விராட் கோலியின் போராட்ட பேட்டிங்கை பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

அண்மையில் தோனியிடம் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் கோலியின் ஆட்டம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது, அப்போது அவர் "கோலி மிகப் பிரமாதமாக ஆடி வருகிறார். கோலி ஏற்கெனவே லெஜண்ட் எனும் ஸ்தானத்தை கிட்டத்தட்ட நெருங்கிவிட்டார். எனக்கு மிகவும் பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறது". 

மேலும் "கோலி தொடர்ந்து சில ஆண்டுகளாகவே தனது மிகச்சிறந்த பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு அணியின் தலைவனாக இருப்பவன் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அந்த இன்னிங்ஸில் கோலி அதைத்தான் செய்தார். இதன் மூலம் அணி மேலும் பல வெற்றிகளை பெரும். கோலிக்கு என் வாழ்த்துகள்" என மகேந்திர சிங் தோனி மனமாற பாராட்டியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com