ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 4 ஆம் இடத்தில் இருந்த இந்திய கேப்டன் விராட் கோலி 5 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் 11 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்களும் விராட் கோலி அடித்தார். இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி வரும் 13 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், 3 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளார். சென்னை டெஸ்டில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் 218, 40 என மொத்தமாக 258 ரன்கள் எடுத்தார். இந்திய கேப்டன் விராட் கோலி 11, 72 என மொத்தமாக 83 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் 883 புள்ளிகளுடன் 3-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் ஜோ ரூட். முதலிடத்தில் உள்ள கேன் வில்லியம்சனை விட 36 புள்ளிகளும் ஸ்டீவ் ஸ்மித்தை விட 8 புள்ளிகளும் பின்தங்கியுள்ளார் ரூட். 4ஆம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் லபுஷனே உள்ளார். இந்திய கேப்டன் விராட் கோலி, 852 புள்ளிகளுடன் 5ஆம் இடத்துக்கு இறங்கியுள்ளார்.