இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சதமடித்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, அந்த சாதனை சதத்தை தனது மனைவிக்கு சமர்ப்பனம் செய்தார்.
இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, பர்மிங்ஹாமில் நடந்து வருகிறது. இது இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆயிரமாவது டெஸ்ட் போட்டி.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 287 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் கேப்டன் ஜோ ரூட் 80 ரன்னும் பேர்ஸ்டோவ் 70 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தா லும், ஒத்தையில கெத்து காட்டிய விராத், அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 225 பந்துகளில் 149 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். இது அவருக்கு சாதனை சதம். இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இது. இதையடுத்து இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்களை குவிக்காதவர் என்ற விமர்சனத்தை உடைத்துள்ளார் விராத்.
சதமடித்து முடித்ததும் பயங்கரமாக கத்திய விராத் கோலி, தனது கழுத்தில் அணிந்திருந்த திருமண மோதிரத்தை எடுத்து முத்தமிட்டார். அதை க் கண்டு அவர் மனைவி அனுஷ்கா சர்மா கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த சதத்தை அவர் தனது மனைவிக்கு அர்ப்பணித்தார்.
இதே போல திருமணம் நடந்த புதிதில் மனைவி அனுஷ்காவுடன் தென்னாப்பிரிக்கா தொடருக்கு சென்றிருந்தார் விராத் கோலி. அங்கு நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராத் இதே போல செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.