அதிவேகமாக 9,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை

அதிவேகமாக 9,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை
அதிவேகமாக 9,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை
Published on

ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 9,000 ரன்களை கடந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களை எடுத்த வீரர் என்ற புதிய சாதனையை கோலி படைத்தார். இந்தப் போட்டியில் 83 ரன்கள் எடுத்தபோது இந்த சாதனையை கோலி படைத்தார். 194 இன்னிங்சில் 9000 ரன்களை கடந்ததன் மூலம் கோலி, டிவில்லியர்ஸ் சாதனையை(205) முறியடித்துள்ளார்.

கோலியின் சில முக்கிய மைல்கள்கள்:-

  • விராட் கோலி ஏற்கனவே 175 இன்னிங்சில் 8000 ஆயிரம் ரன்களை கடந்து, டிவில்லியசின் சாதனையை(182 இன்னிங்ஸ்) முறியடித்தார்.
  • 2013-ம் ஆண்டு அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்து ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்தார்.
  • சமீபத்தில் 31-வது சதம் அடித்ததன் மூலம் ரிக்கி பாண்டிங்(30) சாதனையை முறியடித்தார்.
  • விராட் கோலி - ரோகித் சர்மா ஜோடி நான்காவது முறையாக 200 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com