ஆசிய பசிபிக் பட்டத்தை தக்கவைத்த விஜேந்தர் சிங்

ஆசிய பசிபிக் பட்டத்தை தக்கவைத்த விஜேந்தர் சிங்
ஆசிய பசிபிக் பட்டத்தை தக்கவைத்த விஜேந்தர் சிங்
Published on

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் சீன வீரரை வீழ்த்தி ஆசிய பசிபிக் பட்டத்தை விஜேந்தர் சிங் தக்க வைத்துக் கொண்டார்.

தொழில்முறை குத்துச்சண்டை போட்டியில் இந்திய நட்சத்திர வீரர் விஜேந்தர்சிங், சீனாவின் ஜூல்பிகர் மைமைடியாலியுடன் மும்பையில் நேற்றிரவு பலப்பரீட்சை நடத்தினார். 10 ரவுண்டுகள் கொண்ட இந்த பந்தயத்தில் விஜேந்தர்சிங் எதிராளிக்கு சரமாரியாக குத்துகளை விட்டு தாக்குதல் தொடுத்தார். அதே நேரத்தில் ஜூல்பிகரும் பதிலடி கொடுக்க தவறவில்லை. 10 சுற்றுகளும் அவர் தாக்குப்பிடித்தார். 

முடிவில் நடுவர்களின் தீர்ப்பின் அடிப்படையில் விஜேந்தர் சிங் 96-93, 95-94, 95-94 என்ற புள்ளி கணக்கில் ஜூல்பிகரை வீழ்த்தி ஆசிய பசிபிக் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். அத்துடன் ஜூல்பிகரிடம் இருந்த ஒரியன்டல் சூப்பர் மிடில்வெயிட் பட்டத்தையும் தட்டிப்பறித்து தன்னுடன் இணைத்துக் கொண்டார். தொழில்முறை குத்துச்சண்டைக்குள் நுழைந்த பிறகு தோல்வியே சந்திக்காத 32 வயதான விஜேந்தர்சிங் தொடர்ச்சியாக சுவைத்த 9-வது வெற்றி இதுவாகும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com