விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்சை வீழ்த்திய ஸ்பெயின் வீராங்கனை முகுருசா சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
விம்பிள்டன் டென்னிஸின் மகளிர் ஒன்றையர் பிரிவு இறுதிப் போட்டி லண்டனில் இன்று நடைபெற்றது. இதில் விம்பிள்டனில் 5 முறை பட்டம் வென்ற வீனஸ் வில்லியம்ஸ், ஸ்பெயினின் முகுருசா ஆகியோர் களமிறங்கினர். முடிவில் முகுருசா, அனுபவ வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸை 7-5, 6-0 என்ற நேர் செட் கணக்குகளில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற முகுருசாவிற்கு பரிசுத்தொகையாக ரூ.18½ கோடி கிடைக்கும்.