இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கா ஓய்வு!

இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கா ஓய்வு!
இலங்கை கிரிக்கெட் வீரர் உபுல் தரங்கா ஓய்வு!
Published on

இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக இருந்த உபுல் தரங்கா சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்து இருக்கிறார்.

கடந்த 15 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்த தரங்கா, அந்த அணியின் கேப்டனாக 2017-ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரை பொறுப்பு வகித்தார். கடைசியாக கடந்த 2019-இல் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை அணியில் அவா் இடம் பிடித்திருந்தார். இடதுகை பேட்ஸ்மேனான அவா் தொடக்க வீரராக ஆடி வந்தார்.

2005-ஆம் ஆண்டு டிசம்பரில் அகமதாபாதில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான ஆட்டம் மூலம் சர்வதேச டெஸ்டில் அறிமுகமான உபுல் தரங்கா, கடைசியாக 2017- இல் பல்லெகெலேவில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் விளையாடியிருந்தார். 2005-இல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் சா்வதேச ஒருநாள் கிரிக்கெட்டை தொடங்கினார்.

உபுல் தரங்கா இதுவரை 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1754 ரன்கள் எடுத்துள்ளார். அவருடைய அதிகபட்ச ஸ்கோர் 165. மொத்தம் 3 சதம் மற்றும் 8 அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் 235 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6951 ரன்களை குவித்துள்ளார். அதில் மொத்தம் 15 சதங்களும் 37 அரை சதமும் விளாசியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com