இந்திய அணியின் கவுஷல் தாம்பே 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் காலிறுதியில் வங்கதேச அணிக்கு எதிராக சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற செய்துள்ளார். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த வங்கதேச அணி 111 ரன்களை எடுத்து அவுட்டானது. அந்த இலக்கை விரட்டிய இந்திய அணி 30.5 ஓவர்களில் 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
31-வது ஓவரை வங்கதேச அணியின் கேப்டன் ரகிபுல் ஹசன் வீசியிருந்தார். அந்த ஓவரின் ஐந்தாவது பந்தை சிக்சர் விளாசி அணியை வெற்றி பெற செய்தார் கவுஷல் தாம்பே. 18 பந்துகளில் 11 ரன்களை அவர் எடுத்திருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி வரும் பிப்ரவரி 2-ஆம் தேதி அன்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் விளையாடுகிறது.