ஒரே ஆளாக நின்று பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி காஷ்வீ கவுதம் சாதனை

ஒரே ஆளாக நின்று பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி காஷ்வீ கவுதம் சாதனை

ஒரே ஆளாக நின்று பத்து விக்கெட்டுகளை வீழ்த்தி காஷ்வீ கவுதம் சாதனை
Published on

சண்டிகர் பெண்கள் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் காஷ்வீ கவுதம் உள்ளூர் ஒருநாள் போட்டியில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

சண்டிகர் பெண்கள் கிரிக்கெட் 19 வயதுக்குட்டபட்டோர் அணியில் பந்து வீச்சாளராக இருப்பவர் காஷ்வீ கவுதம். சண்டிகர் அணிக்கும் அருணாச்சல பிரதேச அணிக்கும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டி, ஆந்திராவில் நடைபெற்றது. காஷ்வீ கவுதம் சண்டிகர் பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக உள்ளார். அருணாச்சலப் பிரதேச அணிக்காக இன்று நடைபெற்ற ஒருநாள் போட்டியில் பந்து வீசிய அவர் 10 விக்கெட்டுகளை தனி ஒருவராக வீழ்த்தியுள்ளார்.

அருணாச்சலப் பிரதேச அணிக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய சண்டிகர் அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. காஷ்வீ கவுதம் 68 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். இதற்கடுத்து பந்துவீசிய சண்டிகர் அணியின் கேப்டன் காஷ்வீ கவுதம் 4.5 ஓவர்கள் வீசி 12 ரன்களை விட்டுக்கொடுத்து 10 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதில் ஹாட்ரிக் விக்கெட்டையும் வீழ்த்தினார். இதனால் அருணாச்சலப் பிரதேச அணி 25 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

காஷ்வீ இதற்கு முன்பு பீகார் அணியுடனான போட்டியில் 10 ஓவர்கள் வீசி 6 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். சண்டிகர் அணி அடுத்தப் போட்டியில் புதுச்சேரியுடன் மோதுகிறது. சர்வதேச கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரை டெஸ்ட் ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய சுழற்பந்து ஜாம்பவான் அணில் கும்பளே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைப்படைத்தார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com