நிதி பற்றாக்குறை காரணமாக சோவியத் யூனியனைச் சேர்ந்த முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஓல்கா கோர்பட் தாம் வென்ற ஒலிம்பிக் பதக்கங்களை ஏலத்தில் விற்றுள்ளார்.
பெலாரசில் பிறந்த ஓல்கா கோர்பட், ஒலிம்பிக்கில் 4 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார். இவர், கடந்த 1991ஆம் ஆண்டு அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திற்கு குடிபெயர்ந்தார். 61 வயதான ஓல்கா கோர்பட், நிதி பற்றாக்குறை காரணமாக மியூனிக் ஒலிம்பிக்கில் வென்ற இரண்டு தங்கம், ஒரு வெள்ளி உட்பட, மொத்தம் 7 பதக்கங்களை ஏலத்தில் விற்றுள்ளார். அந்தப் பதக்கங்கள் சுமார் ஒரு கோடியே 22 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானதாக ரஷ்யாவைச் சேர்ந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தொகை அவரின் பசியைப் போக்க பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.