காஷ்மீர் எங்களுக்குதான் சொந்தம்: ட்விட்டரில் ரெய்னா- அஃப்ரிதி சண்டை

காஷ்மீர் எங்களுக்குதான் சொந்தம்: ட்விட்டரில் ரெய்னா- அஃப்ரிதி சண்டை
காஷ்மீர் எங்களுக்குதான் சொந்தம்: ட்விட்டரில் ரெய்னா- அஃப்ரிதி சண்டை
Published on

காஷ்மீர் குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்துகளை பதிவிட்ட பாகிஸ்தான் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் 
அஃப்ரிதிக்கு சுரேஷ் ரெய்னா தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிதி காஷ்மீர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். “இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் வருத்தமளிக்கும் வகையிலும், அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுய உரிமை மற்றும் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்தி வருபவர்களின் குரலை ஒடுக்க அவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகளைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

அஃப்ரிதியின் இந்தப் பதிவுக்கு காம்பீர், கோலி, கபில்தேவ் உள்ளிட்டோர் தங்களது  கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் அஃப்ரிதியின் ட்வீட்டுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ரெய்னா “காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி. அது, எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும். எங்கள் முன்னோர்கள் பிறந்த புண்ணிய பூமி இது. எங்கள் காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திவரும் தீவிரவாதத்தையும், போரையும் நிறுத்துமாறு அவர்களிடம் ஷாகித் அஃப்ரிடி கூறுவார் என நம்புகிறேன். நாங்கள் விரும்புவது அமைதியை மட்டுமே வன்முறையை அல்ல’’ என்று கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com