விஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை

விஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை
விஹாரி சதம், கில் இரட்டை சதம்: இந்திய ஏ அணி முன்னிலை
Published on

வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியுடனான அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் சுப்மான் கில் இரட்டை சதம் விளாசினார்.

இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து அந்நாட்டு ஏ அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி, இப்போது நடந்து வருகிறது. இந்திய ஏ அணி, முதல் இன்னிங்ஸில் 201 ரன்கள் எடுத்தது. சாஹா 62 ரன்களும் கேப்டன் விஹாரி 55 ரன்களும் எடுத்தனர். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி ஆடியது. இந்திய ஏ அணியின் சுழற்பந்துவீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதமின் ஹாட்ரிக் விக்கெட்டால் அந்த அணி, 194 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. மொத்தம் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் கவுதம்.

அடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய ஏ அணி, 3 விக்கெட் இழப்புக்கு 23 ரன் எடுத்திருந்தது. நதீம் 5 ரன்களுடனும் சுப்மன் கில் 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

3 வது நாள் ஆட்டம் நேற்று தொடர்ந்தது. நதீம் 13 ரன் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். இதையடுத்து கில்லுடன் கேப்டன் விஹாரி இணைந்தார். சிறப்பாக ஆடிய கில் இரட்டை சதம் விளாசினார். விஹாரி சதம் அடித்தார். அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுக்கு 365 ஆக இருந்தபோது, டிக்ளேர் செய்யப்பட்டது. சுப்மான் கில் 240 ரன்களுடனும் விஹாரி, 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. நேற்றைய ஆட்ட நேர முடிவில் அந்த அணி 37 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஹோட்ஜ் 15 ரன்னுடனும் சோலோஸனோ 20 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். 
வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி வெற்றி பெற இன்னும் 336 ரன்கள் தேவை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com