கொரோனா தாக்கம் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு..!

கொரோனா தாக்கம் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு..!
கொரோனா தாக்கம் எதிரொலி: ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைப்பு..!
Published on

கொரோனா அச்சம் காரணமாக டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான பணிகளை ஜப்பான் அரசு மிக விமர்சையாக செய்து வந்தது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருவதால், இந்தப் போட்டிகள் ரத்து செய்யப்படலாம் எனத் தகவல் பரவியது.

இதனிடையே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில், ஒலிம்பிக் போட்டிகளைத் தள்ளி வைப்பது உள்ளிட்ட அம்சங்களை விவாதிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். ஒலிம்பிக் போட்டிகள் குறித்த இறுதி முடிவு நான்கு வாரங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் டோக்கியோ ஒலிம்பிக் தொடரை ரத்து செய்யும் திட்டமில்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இதனையடுத்து தடகள சங்கத்தால் கணக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான தடகள மற்றும் ஆடுகள விளையாட்டு வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என்றே விரும்பியுள்ளனர். ஏனெனில் இச்சங்கத்திலுள்ள பயிற்சியாளர்கள் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்துப் பேசியுள்ள கிறிஸ்டியன் டெய்லர், 78% விளையாட்டு வீரர்கள் இந்த ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுகளைத் தள்ளி வைக்க வேண்டும் என விரும்புவதாகக் கூறியுள்ளார். மேலும் சாம்பியன் டெய்லர் "ஒலிம்பிக்கைக் குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்குப் பின்னுக்குத் தள்ளி வைக்க வேண்டும்" என்று டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் எழுதியுள்ளார். இதனிடையே தான் ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜப்பானிலுள்ள டோக்கியோவில் ஜூன் மாதம் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே, சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாக் உடன் ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அதன்படி ஒலிம்பிக்கை சுமார் ஒரு வருடம் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாகக் கூறியுள்ளார். இந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டு கோடையில் நடைபெறும் என்றும் அபே தெரிவித்துள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com