ஜப்பானில் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டம் தொடங்கியது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதாக இருந்தது. கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை 23 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி, ஜப்பான் முழுவதும் ஒலிம்பிக் தீபம் எடுத்து செல்லப்படுகிறது.
புகுஷிமாவில் தொடங்கிய தொடர் ஓட்டம், 121 நாள் பயணித்து, ஜூலை மாதம் டோக்கியோ வந்தடைகிறது. நம்பிக்கையின் ஒளியே நமது வழி என்ற தலைப்பில், ஜப்பானில் சிறப்புவாய்ந்த 47 இடங்கள் வழியே தொடர் ஓட்டம் பயணிக்கிறது. கொரோனா அச்சம் காரணமாக ஒலிம்பிக் போட்டியில், வெளிநாட்டு பார்வையாளர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.