ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக்கா? இருவரில் யாருக்கு வாய்ப்பு? - ஸ்டெய்ன் நச் பதில்

ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக்கா? இருவரில் யாருக்கு வாய்ப்பு? - ஸ்டெய்ன் நச் பதில்
ரிஷப் பண்ட்டா? தினேஷ் கார்த்திக்கா? இருவரில் யாருக்கு வாய்ப்பு? - ஸ்டெய்ன் நச் பதில்
Published on

''தினேஷ் கார்த்திக் இந்த ஃபார்மைத் தொடர்ந்தால்,  டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் நிச்சயம் இடம்பெறுவார்'' என்று கூறியுள்ளார் டேல் ஸ்டெய்ன்.

நேற்று நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4-வது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நேற்றைய ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று டி20 போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார்.

இந்நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்னிடம்  பேட்டி ஒன்றில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்-பேட்டர்களுக்கு ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரில் யாரை தேர்வு செய்யலாம் என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ஸ்டெய்ன், ''இந்த தொடரில் ரிஷப் பண்ட்டுக்கு நான்கு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் அவர் ஒரே தவறைத் திரும்பத்திரும்ப செய்கிறார்.  ஒரு நல்ல வீரர் தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் ரிஷப் பண்ட் அவ்வாறில்லை.

தினேஷ் கார்த்திக் ஒவ்வொரு முறையும் தான் ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர் என்பதை நிரூபிக்கிறார். இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், ஃபார்மில் இருக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினேஷ் கார்த்திக் மிகவும் அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் இந்த ஃபார்மைத் தொடர்ந்தால்,  டி20  உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் நிச்சயம் இடம்பெறலாம்'' என்று கூறினார்.

முன்னதாக இந்த வெற்றி குறித்து கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், ''தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். ஹர்திக் பாண்ட்யா அவருக்கு உறுதுணையாக நிலையாக நின்று ஆடினார்''' என்று கூறினார்.

இதையும் படிக்கலாம்: நெதர்லாந்தை துவம்சம் செய்த பட்லர்.. சொந்த சாதனையை முறியடித்து இங்கிலாந்து அணி மிரட்டல்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com