"கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது" – டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி

"கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது" – டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி
"கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது" – டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி
Published on

“கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு கிடையவே கிடையாது. அரசியல்வாதிகள் பரிந்துரை செய்தாலும் கிரிக்கெட்டில் வரமுடியாது” என்று தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி தெரிவித்தார்.

விக்கிரவாண்டியிலுள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் புதிய கிரிக்கெட் மைதானத்தை தமிழக கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, “இந்தியாவிலுள்ள மாநிலங்களில் தமிழகத்திலுள்ள கிரிக்கெட் சங்கம் தான் சிறந்த பாரம்பரியமிக்க கிரிக்கெட் சங்கமாக செயல்படுகிறது. கிராமப் புறங்களில் அதிகமானோர் கிரிக்கெட்டில் திறமை மிக்கவர்களாக உள்ளனர். அவர்களின திறமையை வெளிக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கபடும்.

தமிழகத்தில் அஸ்வின், தினேஷ் கார்த்திக் போன்றவர்களின் திறமை மட்டும் தான் வெளியில் தெரிகிறது. அவர்களை போல் சாய்கிஷோர், சாய் சுதர்சன், ஜெகதீசன் போன்றவர்கள் உள்ளார்கள். ஜெகதீசன் தொடர்ந்து ஐந்து சதங்கள், 277 ரன் என அடித்து உலக சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய அணிக்கான தேர்வு, ரஞ்சி டிராபி மூலம் தேர்வு செய்யப்படுவதால் இந்த முறை தமிழக அணி சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். தமிழக அணியில் 4-க்கும் மேற்பட்ட திறமையான வீரர்கள் காத்திருக்கிறார்கள். நிறைய பேர் கிரிக்கெட்டில் திறமையாக உள்ளதால் அவர்கள் தேர்வாவதில் அதிர்ஷ்டமும், திறமையும் இருக்க வேண்டும்.

கிரிக்கெட்டில் அரசியல் தலையீடு என்பது கிடையவே கிடையாது. அப்படி அரசியல்வாதிகள் பரிந்துரை செய்தால் கூட கிரிக்கெட்டில் வரமுடியாது. அப்படி ஒருவர் இருவர் அரசியல் பின்புலத்தில் வந்தால் கூட அவர்கள் திறமையால் மட்டுமே கிரிக்கெட்டில் நிலைத்து நிற்க முடியும். அரசியல் பின்புலம் என்றால் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் மகன் இந்திய அணியில் தேர்வாகி இருக்கலாம். ஆனால் அது நடைபெறவில்லை. திறமை மட்டுமே கிரிக்கெட்டிற்கு முக்கியம்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com