அடுத்த ஒலிம்பிக் போட்டியை வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்: உசேன் போல்ட்

அடுத்த ஒலிம்பிக் போட்டியை வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்: உசேன் போல்ட்
அடுத்த ஒலிம்பிக் போட்டியை வேடிக்கை மட்டுமே பார்ப்பேன்: உசேன் போல்ட்
Published on

அடுத்த ஒலிம்பிக் போட்டியை கேலரியிலிருந்து வேடிக்கை மட்டுமே பார்ப்பேன். அதில் கலந்து கொள்ள மாட்டேன் என்று உலக ஓட்டப்பந்தய சாம்பியன் உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

செக் குடியரசில் நடைபெறும் உலக தடகளப் போட்டியில் கலந்து கொள்ள சென்ற உசேன் போல்ட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “நான் சிறந்த ஆட்டங்களை பெற்றிருக்கிறேன். எனக்கு என்ன தேவையோ அதை அனைத்தையும் செய்து விட்டேன். தற்போது அது முடிவுக்கு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். லண்டனில் நடக்க இருக்கும் உலக தடகள சாம்பியன் போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். அப்போட்டி எனக்கு உணர்வுபூர்வமாக இருக்கும். அடுத்த ஒலிம்பிக் போட்டியில் 100, 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கேலரியில் அமர்ந்து பார்ப்பேன். தற்போது நிறைய இளம் வீரர்கள் வருகிறார்கள். இதில் யார் பட்டத்தை வெல்வார்கள் என்பதை பார்க்க ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

உசேன் போல்ட், 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 9.58 விநாடிகளும், 200 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பந்தய தூரத்தை 19.19 விநாடிகளும் கடந்து உலக சாதனை படைத்தவர். இவருடைய சாதனையை முறியடிப்பது எளிதான காரியம் இல்லை என்பது தடகள விளையாட்டு ஆர்வலர்களின் கருத்து.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com