கண்ணீர் மல்க தேசிய கீதத்திற்கு மரியாதை செய்த ஹிமா தாஸ் - வைரல் வீடியோ

கண்ணீர் மல்க தேசிய கீதத்திற்கு மரியாதை செய்த ஹிமா தாஸ் - வைரல் வீடியோ
கண்ணீர் மல்க தேசிய கீதத்திற்கு மரியாதை செய்த ஹிமா தாஸ் - வைரல் வீடியோ
Published on

சர்வதேச ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற ஹிமா தாஸ், தேசிய கீதம் இசைக்கும் போது கண்ணீர் மல்க பாடியது பார்ப்பவர்களை உருவ வைத்துள்ளது. 

பின்லாந்தில் நடைபெற்ற சர்வதேச தடகள கழகத்தின் (ஐஏஏஎப்) 20 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான சாம்பியன்ஸ் தொடரில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹிமா தாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

இதன் மூலம் ஐஏஏஎப் ஜூனியர் சாம்பியன்ஸ் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை 18 வயதாகும் ஹிமா தாஸ் பெற்றுள்ளார். போட்டி முடிந்ததை அவர் தேசியக் கொடியை போர்த்தியவாறு வலம் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

அதேபோல், போட்டியின் முடிவில் இந்திய நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது, தங்கப்பதக்கம் வென்ற ஹிமா தாஸ் தன்னுடைய உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் மல்க தேசிய கீதம் பாடினார். இந்தக் காட்சிகள் பார்ப்பவர்களை களங்க வைத்துவிட்டது. ஹிமா தாஸ் கண்ணீர் சொட்டச் சொட்ட தேசிய கீதம் பாடும் காட்சிகள் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி, கவுதம் காம்பீர் உள்ளிட்ட பலரும் அந்த வீடியோ பதிவுகளை பகிர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

வெற்றிக்கு பின் ஹிமா கூறுகையில், “இந்தியாவிற்காக தங்கம் வென்றத்தில் மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய பயிற்சியாளர்களுக்கும், பெற்றோர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் தான் என்னுடைய வெற்றிக்கு முக்கிய சக்தியாக இருக்கிறார்கள்” என்றார்.

ஓடுவதற்கு முன்பு உங்கள் மனதில் என்னவெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தீர்கள் என்ற கேள்விக்கு அவர், “ஓட்டப்பந்தயத்திற்கு முன்பு  நான் எதைப்பற்றியும் நினைக்கவில்லை. அப்படி நான் எதையேனும் அதிகமாக நினைத்துக் கொண்டிருந்தால், ஓடுவதில் கவனம் செலுத்த முடியாமல் போயிருக்கும். ஹிமா ஓடு என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன்” என்றார்.

ஹிமாவின் பயிற்சியாளர் ஒருவர் கூறும் போது, “ஹிமா எப்பொழுதும் தன்னுடன் ஓடுபவர்கள் பற்றி கவலைக் கொள்வதேயில்லை. அவர்களை பற்றி எதுவும் நினைக்க மாட்டார். அவரது ஒரே குறிக்கோள், தன்னுடைய முந்தைய சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதுதான். அதற்காகதான் ஓடுவார்” என்றார்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஹிமா தாஸின் ஹிமாவின் குடும்பம் விவசாயப் பின்னணியைக் கொண்டது. தன்னுடைய விவாசய நிலத்தில் ஓடத் தொடங்கிய ஹிமா தாஸ் சர்வதேச போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com