இந்தியா ஒயிட் வாஷ் செய்யுமா? நியூசி. ஆறுதல் வெற்றி பெறுமா? : இன்று 3வது டி20 போட்டி

இந்தியா ஒயிட் வாஷ் செய்யுமா? நியூசி. ஆறுதல் வெற்றி பெறுமா? : இன்று 3வது டி20 போட்டி
இந்தியா ஒயிட் வாஷ் செய்யுமா? நியூசி. ஆறுதல் வெற்றி பெறுமா? : இன்று 3வது டி20 போட்டி
Published on
இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையே மூன்றாவது மற்றும் கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இந்தியாவில் பயணம் மேற்கொண்டுள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் ராஞ்சியில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இந்தியா, தொடரைக் கைப்பற்றி விட்டது. மூன்றாவது மற்றும் இறுதி டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய போட்டியிலும் வென்று நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்யுமா அல்லது ஆறுதல் வெற்றியை நியூசிலாந்து பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இரு அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூரில் வருகிற 25ஆம் தேதி தொடங்கவுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com