”நீ இறங்கி ஆடு கபிலா இது நம்ம காலம்” என வாழ்த்துகளை பெற்றுவருகிறார் தமிழக வாலிபால் வீரர்.!

”நீ இறங்கி ஆடு கபிலா இது நம்ம காலம்” என வாழ்த்துகளை பெற்றுவருகிறார் தமிழக வாலிபால் வீரர்.!
”நீ இறங்கி ஆடு கபிலா இது நம்ம காலம்” என வாழ்த்துகளை பெற்றுவருகிறார் தமிழக வாலிபால் வீரர்.!
Published on

உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்காக பங்கேற்று விளையாடவிருக்கும் தமிழக விளையாட்டு வீரர் கபிலனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உலக வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் 14 வருடங்களுக்குப் பிறகு இந்தியா பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியில் பங்கேற்று விளையாட இருக்கிறார் தமிழக வீரர் கபிலன்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் மேட்டுப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் மகேந்திரன்- கஜலட்சுமி. இவர்களின் 17 வயது மகன் கபிலன். இவர் திருநெல்வேலியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். மற்றும் அங்குள்ள விளையாட்டு விடுதியில் தங்கி வாலிபால் போட்டிக்கு பயிற்சி எடுத்து வருகிறார்.

சிறுவயதிலிருந்தே விளையாட்டுக்களில் ஆர்வம் கொண்ட கபிலன் வாலிபால் போட்டியில் மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆக்ஸ்ட் 22 ஆம் தேதி ஈரானில் நடைபெற்ற 14ஆவது ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் பிரிவு அணியில் தமிழகத்தில் இருந்து கபிலன் பங்கேற்று விளையாடினார்.

இந்தியாவில் இருந்து மொத்தம் 12 பேர் வாலிபால் போட்டியில் பங்கேற்று விளையாடிய நிலையில், உலக நாடுகளில் இருந்து எட்டு அணிகள் பங்கேற்றன. அந்த சாம்பியன்ஷிப் போட்டி தொடரில் இந்தியாவுக்கு வெண்கல பதக்கம் கிடைத்தது. இதன் மூலம் இந்திய அணி அடுத்த ஆண்டு உலக அளவில் நடைபெறும் வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

உலக சாம்பியன்ஷிப் வாலிபால் போட்டியில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா சார்பில் 19 வயதுக்கு கீழ் உள்ள பிரிவில் இந்திய அணி விளையாட தகுதி பெற்றுள்ள நிலையில், தமிழகத்திலிருந்து இந்திய அணியில் பங்கேற்று விளையாடவிருக்கும் மதுரையைச் சேர்ந்த கபிலன் இடம் பெற்றிருப்பது பலரது பாராட்டையும் பெற்று வருகிறது.

இந்நிலையில் வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, வாலிபால் வீரரான கபிலனை நேரில் அழைத்து வாழ்த்து சொன்னர். மேலும் வீரருக்கு பொன்னாடை அணிவித்து அமைச்சர் மற்றும் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com