விராட் கோலி, பொல்லார்ட், ஹர்திக் ஆகியோரின் அறிவுரைகள் தான் மீண்டும் ஃபார்முக்கு வர உதவியதாக மும்பை அணியின் இளம் வீரர் இஷான் கிஷன் கூறியுள்ளார்.
நடப்பு சீசன் ஐபிஎல்லில் ரன்களைச் சேர்க்க திணறி வந்த இஷான், ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக அரைசதம் விளாசினார். போட்டிக்குப் பின்னர் பேட்டியளித்த இஷான், ரன்களைச் சேர்க்க திணறி வந்த சூழலில் விராட், ஹர்திக், பொல்லார்டு ஆகியோர் மிகவும் ஆறுதலாக இருந்ததாக தெரிவித்தார். கடந்த சீசனில் தம்முடைய வீடியோக்களையே மீண்டும் பொல்லார்டு காணக் கூறியது மிகவும் உதவிகரமாக இருந்ததாக கிஷன் கூறியுள்ளார்.