ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதற்கு பிறகு இந்தியா பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டி இதுவாகும். வங்கதேச தலைநகர் டாக்காவில் நடைபெற்ற போட்டியில், 4 மற்றும் 18-வது நிமிடங்களில் இந்தியா கோல் அடித்து முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதி ஆட்டத்தில், சிறப்பாக விளையாடிய தென் கொரியா 2 கோல்கள் அடித்து ஆட்டத்தை டிரா செய்தது.