பிரேசில் உலகக் கோப்பையை வெல்லுமா ?

பிரேசில் உலகக் கோப்பையை வெல்லுமா ?
பிரேசில் உலகக் கோப்பையை வெல்லுமா ?
Published on

6 ஆவது முறையாக உலகக்கோப்பையை வெல்லும் பெரும் உந்துதலுடன் இருக்கிறது பிரேசில் அணி.  

உலகக்கோப்பையை இம்முறை ஏந்தும் அணி என கணிக்கப்பட்டுள்ள அணிகளில் முதன்மையானதாக இருக்கிறது பிரேசில். நடப்புச் சாம்பியனும், முதல் நிலை அணியுமான ஜெர்மனி தொடரிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் பிரேசில் அணியின் ஆட்டத்தை பன்னாட்டு ரசிகர்களும் அதிகம் எதிர்பார்த்துள்ளனர். கால்பந்து கலாசாரத்தை உயிர்மூச்சாக கருதும் பிரேசில் நாட்டினர், தங்கள் அணி கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். காரணம், 10 போட்டிகளில் தொடர்ந்து வென்று ரஷ்யாவில் நடைபெறும் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கு முதல் அணியாக தகுதிபெற்றது பிரேசில்தான்.

21 ஆவது முறையாக உலகக்கோப்பையில் பங்கேற்பு, 11 முறை அரை இறுதி வரை முன்னேறியது, 7 முறை இறுதியாட்டத்திற்கு முன்னேறியது, 5 முறை கோப்பையை வென்றது என பிரேசில் அணியின் சாதனைப்பட்டியல் நீளமானது. 25 வயது முன்கள நாயகன் நெய்மர் பிரேசில் அணியின் பெரும் பலமாக விளங்குகிறார். எதிரணி வீரர்களுக்கு போக்கு காட்டி நெய்மர் நிகழ்த்தும் கால்பந்து சாகசங்கள் மீது எப்போதும் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு உண்டு.

தியாகோ சில்வா, மிராண்டா, ஃபிலிப் லூயிஸ், மார்செலோ, டேனிலோ ஆகியோர் பிரேசில் அணியின் தடுப்பு அரணாக உள்ளனர். மத்திய கள ஆட்டத்தில் மிரட்டக்கூடிய கோட்டினோ, பாலினோ, பெர்னான்டினோ, ஃபிரட், வில்லியன் போன்றோரை சமாளிப்பது எதிரணிக்கு பெரும்பாடுதான். கேப்ரியல் ஜீசஸ், ஃபிர்மினோ, டைசன் ஆகியோர் முன்கள தாக்குதலில் நெய்மருக்கு உதவி புரிவர். நட்சத்திர நாயகர்களோடு பெரும்பலமாக காட்சியளிக்கும் பிரேசில் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புகள் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com