முதல் விம்பிள்டனை குறிவைக்கும் இகா ஸ்வியிடாக்! பட்டத்தைத் தக்கவைப்பாரா அல்கரஸ்?

ஆண்கள் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தன்னுடைய எட்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை குறிவைத்துக் களமிறங்குகிறார்.
Novak Djokovic
Novak DjokovicKirsty Wigglesworth
Published on

2024 விம்பிள்டன் தொடர் தொடங்கவிருக்கிறது. பழமையான, பெருமை மிகுந்த இந்த கிராண்ட் ஸ்லாம் தொடரைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தயாராக இருக்கிறார்கள். நடப்பு சாம்பியன் கார்லோஸ் அல்கரஸ் தன் பட்டத்தைத் தக்கவைப்பாரா, காயத்தாத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் ஜோகோவிச் தன்னுடைய 25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை ஜோகோவிச் வெல்வாரா, களிமண் தரையில் ஆதிக்கம் செலுத்தும் இகா ஸ்வியாடெக் தன் முதல் விம்பிள்டன் பட்டத்தை வெல்வாரா என பல பரபரப்பான கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கின்றன.

புகழ்பெற்ற கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் ஜூலை 1 முதல் 14 வரை லண்டனில் நடக்கிறது. தகுதிச் சுற்றுப் போட்டிகள் ஜூன் 27 முடிந்துள்ள நிலையில், முதல் சுற்றுப் போட்டிகள் திங்கள் கிழமை முதல் தொடங்குகின்றன.

தன் பட்டத்தை தக்கவைப்பாரா கார்லோஸ் அல்கரஸ்

Novak Djokovic
இந்த தலைமுறையின் மிகச் சிறந்த பௌலர் ’ஜஸ்ப்ரித் பும்ரா’! T20WC தொடரின் நாயகன்.. தேசத்தின் நாயகன்..!

நோவக் ஜோகோவிச்சை இறுதிப் போட்டியில் வீழ்த்தி 2023 விம்பிள்டன் பட்டத்தைக் கைப்பற்றினார் கார்லோஸ் அல்கரஸ். அதுவே அவரது முதல் விம்பிள்டன் பட்டமாக அமைந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன் தன்னுடைய முதல் பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தையும் வென்றிருக்கிறார் அவர். நல்ல ஃபார்மில் இருக்கும் தன் விம்பிள்டன் பட்டத்தை தக்கவிப்பாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. விம்பிள்டனுக்கு முன்பாக நடந்த கிராஸ் கோர்ட் தொடரான குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது சுற்றிலேயே வெளியேறியிருந்தார் அல்கரஸ். இருந்தாலும் அது எந்த வகையிலும் கிராண்ட்ஸ்லாம் செயல்பாட்டை பிரதிபலிக்கப்போவதில்லை என்ற வாதமும் வைக்கப்படுகிறது. எந்த களிமண் தொடரையும் வெல்லாமல் வந்து தான் அவர் பிரெஞ்சு ஓப்பனை வென்றிருந்தார். அதனால் இதுவும் சாத்தியம் தானே! ஜூலை 1 சென்ட்டர் கோர்ட்டில் நடக்கும் தன்னுடைய முதல் சுற்றிப் போட்டியில் எஸ்தோனியாவின் மார்க் லஜாலை எதிர்கொள்கிறார் அல்கரஸ். 21 வயதான லஜாலுக்கு இதுதான் ஒரு கிராண்ட் ஸ்லாம் பிரதான சுற்றில் முதல் போட்டி.

25வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் குறிவைக்கும் ஜோகோவிச்

ஆண்கள் பிரிவில் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், தன்னுடைய எட்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை குறிவைத்துக் களமிறங்குகிறார். கடந்த முறை அல்கரஸிடம் ஃபைனலை இழந்த அவர், இந்தப் பட்டத்தை வென்றால் அது அவருடைய 25வது கிராண்ட் ஸ்லாமாக அமையும். இந்த பிரெஞ்ச் ஓப்பன் தொடரில் நான்காவது சுற்றின்போது காயமடைந்தார். அந்தப் போட்டியில் வென்றிருந்தாலும் அவரால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. அதனால் காலிறுதிக்கு முன்பே அவர் தொடரிலிருந்து விலகினார். இப்போது முழு ஃபிட்னஸோடு மீண்டு வந்து தனது சில்வர் ஜூப்ளி பட்டத்தை அவர் வெல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் தன் முதல் சுற்றில் செக் குடியரசின் விட் கோப்ரிபாவுடன் மோதுகிறார்.

சின்னர், மெத்வதேவ் - யாரால் தாக்கம் ஏற்படுத்த முடியும்?

அல்கரஸ், ஜோகோவிச் போக ஆண்கள் பிரிவில் நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் மற்றும் டேனி மெத்வதேவ் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கின்றன. இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓப்பன் பட்டத்தை வென்ற சின்னர், பிரெஞ்சு ஓப்பனில் அரையிறூதி வரை முன்னேறி அசத்தினார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவர், விம்பிள்டனிலும் தன் திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு விம்பிள்டன் அரையிறுதியில் அல்கரஸிடம் நேர் செட்களில் தோற்றிருந்தார் அவர். அதேபோல், மெத்வதேவ் கடந்த 3 ஆண்டுகளாக தன்னுடைய இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அவரும் கடந்த ஆண்டு அரையிறுதியில் தோற்றிருந்தார். இம்முறை இன்னும் ஒரு படி சேர்த்து வைக்க முயற்சிப்பார் அவர்.

முதல் விம்பிள்டன் பட்டத்தை வெல்வாரா இகா ஸ்வியாடெக்

பெண்கள் பிரிவில் ஈடு இணையற்ற நம்பர் 1 வீராங்கனையாக வலம் வந்துகொண்டிருக்கிறார் போலாந்தின் இகா ஸ்வியாடெக். இந்த ஜூனில் தன்னுடைய 4வது பிரெஞ்சு ஓப்பன் பட்டத்தை வென்று அசத்தினார் அவர். அதுவும் கடைசி மூன்றையும் தொடர்ந்து வென்று ஹாட்ரிக் அடித்திருக்கிறார் அவர். களிமண் மற்றும் ஹார்ட் கோர்ட் (அமெரிக்க ஓப்பன்) கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கும் இகா, இதுவரை விம்பிள்டன் தொடரை வென்றதில்லை. சொல்லப்போனால் அவர் கடந்த ஆண்டு காலிறுதியை அடைந்தது தான் இங்கு அவரது சிறப்பான செயல்பாடாக இருந்திருக்கிறது. களிமண் தரை ஆடுகளங்கள் போல் புல்தரையில் அவரால் ஜொலிக்க முடிவதில்லை. இந்த முறையாவது அவர் அதை மாற்றி தன் முதல் விம்பிள்டனை வெல்வாரா என்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Novak Djokovic
ஓராயிரம் கேள்விகள்... கோப்பை வென்று பதில் சொன்ன ரோஹித் & கோலி!

மார்கெட்டா வோண்டுரசோவா, எலீனா ரிபாகினா, ஓன்ஸ் ஜபோர் ஆகியோர் ஸ்வியாடெக்குக்கு பெரிய சவாலாக இருப்பார்கள். கடந்த இரண்டு விம்பிள்டன் தொடர்களின் இறுதிப் போட்டியிலும் முறையா வோண்டுரசோவா, ரிபாகினா ஆகியோரிடம் இழந்தார் ஓன்ஸ் ஜபோர். தன்னுடைய முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தைக் குறிவைக்கும் அவருக்கு மூன்றாவது வாய்ப்பில் அது கைகிட்டுமா என்று பார்க்க ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமும் காத்திருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com