விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் செக் குடியரசின் பார்போரா ரெஜ்சிகோவா (Barbora Krejcikova), கஜகஸ்தான் வீராங்னை எலினா ரைபாகினா (Elena Rybakina) மோதினர்.
இதில் முதல் செட்டை ரைபாகினா கைப்பற்றிய நிலையில் சுதாரித்துக் கொண்டு விளையாடிய பார்போரா அடுத்த இரு செட்களையும் தன் வசமாக்கினார். இதன்மூலம் 3-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் பார்போரா வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இத்தாலியின் ஜாஸ்மின் ஃபலோனி (JASMINE PAOLINI), குரேஷியா வீராங்கனை டோனா விகிக்கை (DONNA VEKIC) எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய ஃபலோனி முதல் செட்டை இழந்தாலும், அடுத்த இரண்டு செட்களை கைப்பற்றி அசத்தினார்.
இறுதியில் 2-6, 6-7, 7-6 என்ற செட் கணக்கில் ஃபலோனி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். வரும் 13ஆம் தேதி நடக்கும் இறுதிப்போட்டியில், மிகவும் கவுரமிக்க விம்பிள்டன் சாம்பியன் பட்டத்திற்காக பார்ஃபோரா, ஃபலோனி பலபரீட்சை மேற்கொள்கின்றனர்.