கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோக்கோவிச் மற்றும் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் நேற்று (ஜூலை 14) பலப்பரீட்சை நடத்தினர். நடப்பாண்டு விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வெல்ல இருவரும் கடுமையாக போராடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில்
6க்கு 2,
6க்கு 2,
7க்கு 6
என்ற நேர் செட் கணக்கில் ஜோக்கோவிச்சை அல்காரஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கடந்த ஆண்டும் இதே இருவர் மோதிய நிலையில், கார்லஸ் அல்காரஸ் தனது முதல் விம்பிள்டன் பட்டத்தை வென்று ஜோகோவிச்சை அதிர்ச்சியடைய வைத்தது குறிப்பிடத்தக்கது.
இளம் வீரரான கார்லஸ் அல்காரஸ் வெல்லும் 4ஆவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் இது. இதன் பரிசுத்தொகை, இந்திய மதிப்பில் சுமார் 28.5 கோடி ரூபாய். 24முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்று வரலாற்றுச் சாதனையை தன்வசம் வைத்துள்ள ஜோக்கோவிச் இரண்டாவது முறையாக அல்காரஸிடம் சாம்பியன் பட்டத்தை இழந்துள்ளார்.